கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரில் குப்பைகள் கலந்து துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் நிலை உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர். எல்என்புரம் ஊராட்சியில் உள்ள ஆர்எஸ் மணி நகரில் 5 நாட்களாகியும் வடியாத மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதாக தெரிவித்த மக்கள், அதனை அகற்றுவதற்கான எந்தவித நடவடிக்கையையும் அதிகாரிகள் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர்.