தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான வருசநாடு, வெள்ளிமலை, மேகமலை ஆகிய பகுதிகளில் இன்று காலை மிதமான மழை பெய்தது. இதனால் மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.