திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. சுள்ளானாறு, வெட்டாறு ஆகிய ஆறுகளில் கனமழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில் நார்த்தங்குடி, பாப்பாக்குடி, பூந்தோட்டம், பெருங்குடி, ஆலங்குடி உள்ளிட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. சம்பா சாகுபடி தாமதமாக பயிரிடப்பட்ட நிலையில், தற்போது மழைநீர் சேதத்தை ஏற்படுத்தியதால் உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.