சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு திடீர் மழை பெய்தது. நுங்கம்பாக்கத்தில் வெள்ளிக்கிழமை 100 புள்ளி 5 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவான நிலையில், மாலையில் கருமேகம் சூழ்ந்தது. அரும்பாக்கம், சூளைமேடு, வடபழனி, அமைந்தகரை, அண்ணா நகர், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களிலும், புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம், மாங்காடு பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.இதையும் படியுங்கள் : ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முறைகேடு... பேவர் பிளாக் தரை அமைக்கப்பட்டதில் முறைகேடு என புகார்