புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழையால் சந்தை முழுவதும் தண்ணீர் தேங்கி ஆயுதபூஜை வியாபாரம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்னர். புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் ஆலங்குடி பகுதியில் பெய்த கனமழை காரணமாக சந்தையில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் கவலை அடைந்தனர்.