ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் முழுவதும், மழை நீர் சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். குறிப்பாக அவசர சிகிச்சை பிரிவிற்கு செல்லும் வழி, பயிற்சி மருத்துவர்கள் தங்கி இருக்கும் விடுதி, குழந்தைகள் சிகிச்சை பிரிவுக்கு செல்லும் பகுதி என மருத்துவமனை வளாகம் முழுவதும் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மற்றும் புறநோயாளிகளின் நலன் கருதி வளாகத்தில் தேங்கிய மழை நீர் விரைந்த அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.