கயத்தாறு அருகே அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 180 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழையினால் சேதம் - பருவம் தவறி பெய்த மழையினால் நெற்பெயர்கள் அனைத்தும் தரையோடு மடிந்து நீரில் மூழ்கியது என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மழை வந்து ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டதுஏக்கருக்கு 50 ஆயிரம் வரை செலவு செய்த நிலையில் மழை வந்து ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டது, எப்படி நாங்க பாடுபட்டு எப்படி சாப்பிட, அதான் ஒன்றுமே இல்லையே அவ்வளவு பயிறும் வம்பாக போகிவிட்டது, விவசாயத்தை நம்பி இருக்கிறோம், வேற என்ன வேலைதான் பார்க்க பார்க்க முடியும், எங்களுக்கு விவசாயத்தை தவிர வேற என்ன தேரியும் என விவசாயிகள் வேத்னையில் புலம்புகின்றனர். வட்டிக்கு வாங்கி விவசாயம் செய்தோம்3 பைசா முதல் 5 பைசா வரை வட்டிக்கு வாங்கி விவசாயத்தில் போட்டு இருக்கிறோம், இந்த பணத்தை நாங்கள் எப்படி எடுக்க முடியும்? பயிறு விளைந்தால் எடுத்துவிடலாம் என்று தான் நாங்கள் பயிரை போட்டோம், அரசு ஏதாவது ஒரு சலுகை செய்ய வேண்டும் இல்லையென்றால் சாவதை தவிர வேறு வழியில்லை என கண்ணீருடன் தெரிவித்தனர். மழைநீரில் மூழ்கிய சுமார் 200 ஏக்கர் பயிர்கள்கயத்தாறு அருகே உள்ள ராஜாபுதுக்குடி மற்றும் சன்னதுபுதுக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முற்றிலுமாக மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன.பருவம் தவறி பெய்த மழையால் பயிர்கள் சேதம்இன்னும் பத்து தினங்களில் அறுவடை செய்ய வேண்டிய நெற்பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையினால் நெற்பயிர்கள் முற்றிலுமாக மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. பருவும் தவறி பெய்த மழையினால் நெல் பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி தரையோடு சாய்ந்து கிடக்கின்றது குளத்தில் போதிய அளவு தண்ணீர் இல்லாமல் பற்றாக்குறை ஏற்பட்டதால் வாடகைக்கு தண்ணீர் பாய்ச்சி நெல் பயிர்களை அறுவடை தயாராக வைத்திருந்தோம், பெய்த மழையினால் வயலுக்குள் மழை நீர் தேங்கி நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி தரையோடு சாய்ந்துள்ளது.அரசு உரிய நிவாரணம் வழங்க கோரிக்கைஇன்னும் பத்து தினங்களில் அறுவடை செய்ய இருந்த நிலையில் பருவம் தவறிய மழையினால் அனைத்து நெற்பயிர்களும் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. ஏற்கனவே கடன் வாங்கி தான் இந்த ஆண்டு விவசாயப் பணிகளை மேற்கொண்டோம். இந்த சூழ்நிலையில் பருவம் தவறி பெய்த மழையினால் நெற்பயிர்கள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளதால் அரசு உரிய நிவாரணம் வழங்கவும் நெற்பயர்களுக்கு இன்சூரன்ஸ் தொகை வழங்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனையுடன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். Related Link திடீரென கொட்டித்தீர்த்த மழை