ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பரவலாக பெய்த கனமழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட வள்ளல், சீதக்காதி சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.