இரவு நேரத்தில் ரயிலில் பயணம் செய்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவர் ஒருவரை மதுரை இருப்பு பாதை போலீஸார் கைது செய்தனர்.விருதுநகரில் இருந்து சென்னை நோக்கி வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பெண்ணுக்கு, ராஜபாளையத்தை சேர்ந்த முதியவர் லட்சுமணன், பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.