ஓடும் ரயிலில் இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்ய முயன்ற 4 பேரை அரக்கோணம் ரயில்வே போலீசார் கைது செய்தனர். கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் அரக்கோணம் அருகே வந்தபோது பொது பெட்டியில் பயணித்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணிடம் பீகாரை சேர்ந்த இளைஞர்கள் சிலர் சில்மிஷம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து ரயில்வே கட்டுப்பாடு அறைக்கு தகவல் கொடுத்தன் பேரில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் தயாராக இருந்த போலீசார் ரயில் வந்ததும், இளம் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட 4 இளைஞர்களை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் 4 பேரும் பெங்களூருவில் வேலை செய்வது தெரியவந்தது. பின்னர் 4 பேரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.