ஈரோடு அருகே ரயில்வே பைலட் வீட்டில் 10 நாட்கள் தங்கி பொருட்கள் அனைத்தையும் திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். ரயில்வே குடியிருப்பில் வசித்து வரும் அகில் குமார், சொந்த ஊரான கேரளாவிற்கு விடுமுறையில் சென்ற நிலையில், 10 நாட்களுக்கு பின் மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக அகில் குமார் அளித்த புகாரை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.