சென்னை கடற்கரை - எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறுவதால் அவ்வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. காலை 4 முதல் மாலை 5 மணி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு வரை செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.