தென் கிழக்கு வங்கக் கடலில் தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ள மோன்தா புயல் காரணமாக, சென்னையில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. சென்னை மெரினா, பட்டினப்பாக்கத்தில் கடல் கொந்தளிப்புடன் காற்றின் வேகமும் அதிகரித்து காணப்பட்டது. தாழங்குப்பம் பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டதால் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதேபோல, எண்ணூர், காசிமேடு, திருவெற்றியூர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.ஆபத்தை உணராமல் செல்பி எடுக்க குவிந்த கூட்டம்:சென்னை காசிமேட்டில் கடல் சீற்றம் அதிகரித்துள்ள நிலையில, அச்சுறுத்தும் வகையில் உயரமாக அலைகள் எழும்புகின்றன. இந்நிலையில் ஆபத்தை உணராமல், கடல் அலைகளை காணவும், அப்பகுதியில் நின்று செல்ஃபி எடுப்பதற்காகவும் வந்த பொது மக்களை, போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினர். நுழைவு வாயில் பகுதியில் தடுப்புகளை வைத்து பொதுமக்கள் வருவதை தடுத்துள்ள போலீசார், உரிய காரணத்துடன் வரும் மீனவர்களை மட்டும் அனுமதிக்கின்றனர்.இதையும் பாருங்கள்... புயலின் ஆட்டம்.. கொந்தளிக்கும் மெரினா கடல்அதிர்ச்சி காட்சி | CycloneMontha | ChennaiWeather