நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி பகுதியில் 12 பேரை கொன்ற காட்டு யானையை பிடிக்க இரண்டு கும்கி யானைகளுடன் வனத்துறையினர் முகாமிட்டுள்ளனர். ராதாகிருஷ்ணன் என்ற யானையை பிடிக்க வேண்டும் என மக்கள் போராட்டம் நடத்திய நிலையில், ஓவேலி பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தரை வழியிலும் டிரோன் கேமரா உதவியுடனும் யானையை பிடிக்கும் பணிகள் இரண்டாவது நாளாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.