ரேக்ளா பந்தயத்தில் பங்கேற்கும், காங்கேயம் இன காளை அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய்க்கு விலை போயுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை மற்றும் சுற்று வட்டார பகுதி விவசாயிகள், ரேக்ளா எனப்படும் இரட்டை மாட்டு வண்டி பந்தயத்துக்காக, காளைகளை வளர்த்து வருகின்றனர்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ரேக்ளா பந்தய காளை ரூ.22 லட்சத்திற்கு விற்பனையானது. இந்நிலையில், தற்போது உடுமலை அருகே மருள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஹரி என்பவரின் ரேக்ளா பந்தய காங்கேயம் இன காளை, அதிக பட்சமாக, 30 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனது. இந்த காளையை நெகமம் செட்டிக்கம்பாளையத்தை சேர்ந்த விவசாயி ராஜா வாங்கியுள்ளார்.