பெரியாருக்கு விஜய் மரியாதை செலுத்தியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த உதயநிதிஸ்டாலின், பெரியாரை தொடாமல் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது என்றார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில், தந்தை பெரியார் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களுக்கு உதயநிதிஸ்டாலின் பேட்டி அளித்தார்.அப்போது, உங்களுக்கு துணை முதலமைச்சர் பதவி தருவது தொடர்பாக தகவல் பரவி வருவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், துணை முதலமைச்சர் பதவி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் முடிவெடுப்பார் என தெரிவித்தார்