குமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே பாதிரியார் மீது கை வைப்பது ஆண்டவர் மீது கை வைப்பது போன்றதாகும் என காவல் ஆய்வாளர் பேசிய சர்ச்சை வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புன்னைநகர் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலத்தில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட பிரச்சினையின் போது ஒரு தரப்பினர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு வந்த காவல் ஆய்வாளர் அன்பு பிரகாஷ், தான் ஒரு ஆர்சி கிறிஸ்தவன் எனவும் போராட்டக்காரர்களுக்கு சாதகமான முடிவு எடுக்கப்படும் என பேசியது சர்ச்சையாகி உள்ளது.