கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் விசிக மது ஒழிப்பு மாநாட்டில், பெண் காவல் ஆய்வாளரை தள்ளி விட்டு தொண்டர்கள் அத்து மீறிய சம்பவம் அரங்கேறியுள்ளது. மாநாடு நடைபெறும் இடத்திற்கு செல்லும் வழியில், எதிர் திசையில் செல்ல முயன்ற நான்கு சக்கர வாகனத்தை, பெண் ஆய்வாளர் பிரபாவதி தடுத்து நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த விசிக தொண்டர்கள் மற்றும் மகளிர் அணியினர், பெண் காவலர் என்றும் பாராமல் அவரை இழுத்து தள்ளிவிட்டு காரை உள்ளே அனுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.