புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் பேராலயத்தின் 118 ஆவது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 6:00 மணிக்கு சிறப்பு திருப்பலியும், சிறப்பு பிரார்த்தனையும் நடத்தப்பட்டு, புதுச்சேரி - கடலூர் உயர் மறை மாவட்ட பேராயர் குழந்தைசாமி உள்ளிட்டோர் திருக்கொடியை ஏற்றி வைத்தனர். அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.