கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புகைப்பட்டி கிராமத்தில் கோவில் திருவிழாவில் அலகு குத்தி பறவைக்காவடி எடுத்து நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள் சிலர், 50 அடி உயரத்தில் தமிழக வெற்றி கழக பேனரை பறக்க விட்டனர். வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு தேர் திருவிழா மற்றும் அலகு குத்துதல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று அலகு குத்தி, பறவை காவடி எடுத்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.