தஞ்சாவூர் மாவட்டம், புன்னைநல்லூரில் உள்ள மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு, யானை மீது புனித நீர் வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதில் 18 கிராமங்களை சேர்ந்த பெண்கள் ஒரே மாதிரியான சேலை அணிந்துகொண்டு தீர்த்த நீருடன், யாகசாலை மண்டபத்தை வந்தடைந்தனர்.