நிர்வாண வீடியோவை பதிவு செய்து பெண்களிடம் பணம் பறித்து வந்த வேலூரை சேர்ந்த நபரை புதுச்சேரி போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரியில் திருமணமான பெண் ஒருவருக்கு ஷேர் சாட் என்ற செயலி மூலம் அறிமுகமாக நபர் ஒருவர், நட்பாக பேசி பின்னர் காதலிப்பதாக கூறியுள்ளார்.மேலும் அந்த பெண்ணிடம் ஆடையில்லாமல் வீடியோ கால் செய்யும்படி கூறி அதனை ரெக்கார்ட் செய்து வைத்து கொண்ட நபர் பணம் கேட்டு மிரட்டியதாகவும், அதற்கு பயந்து அப்பெண் 6 ஆயிரம் ரூபாயை அனுப்பியதாக தெரிகிறது.இதனால் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், சைபர் கிரைம் உதவியுடம் வேலூரை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரை புதுச்சேரி போலீசார் கைது செய்தனர்.