புதுச்சேரி மதுபாட்டில்களை நூதன முறையில் கடத்தி வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர். இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் மற்றும் இருக்கையில் சிறிய அறை போல உருவாக்கி, அதில் 190 மது பாட்டில்களை கடத்தி வந்த சரண்ராஜ் மற்றும் ஆனந்த பாபு கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மது பாட்டில்கள் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டன.