தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளராக புஸ்சி ஆனந்த் உயர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி வாணரப்பேட்டையில் தனியார் பள்ளியின் 40 ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், வழக்கமாக தாம் நண்பர் என அழைக்கும், புஸ்சி ஆனந்த் தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளராக உயர்ந்திருக்கிறார் என்றார்.