புதுச்சேரியில் பணிநீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி துணைநிலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றதால் கைது செய்யப்பட்டனர். முன்னதாக எருமை மாடு மீது மழை பெய்வது போன்ற பதாகையுடன் முற்றுகையிட வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்புக்கும் கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. புதுச்சேரியில் 2015-ஆம் ஆண்டு பொதுப்பணித்துறையில் பணியமர்த்தபட்ட 2,642 பேர், தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் போது பணியமர்த்தப்பட்டதாகக் கூறி தேர்தல் ஆணையத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டனர். மீண்டும் பணி வழங்க கோரி 8 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.இதையும் படியுங்கள் : அரசு ஆதிதிராவிடர் உண்டு உறைவிட பள்ளி இடமாற்றம்... எதிர்ப்பு தெரிவித்து பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்