அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேலூருக்கு வந்துள்ள, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாலாறு பாலத்தின் வழியாக நடைபயிற்சி மேற்கொண்டார். புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்ட பணிகள் திறப்பு விழா உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேலூருக்கு துணை முதலமைச்சர் வந்துள்ளார். இங்கு, அவர் வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பாலாறு பாலத்தின் வழியாக வேலூர் கோட்டை வரை நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அவருடன் பொது மக்கள், ஆர்வமாக செல்பி எடுத்துக் கொண்டனர்.இதையும் பாருங்கள் - Udhayanidhi Vellore News | Casual ஆக நடந்து வந்த உதயநிதி செல்ஃபி எடுத்து மகிழ்ந்த மக்கள்