சேலம் மாவட்டம் ஏற்காட்டில் அரசு பள்ளி அறிவியல் ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் அப்பள்ளியில் அறிவியல் ஆசியராக பணியாற்றி வரும் இளையகண்ணு என்பவர் மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பள்ளிக்கு வந்த குழந்தைகள் நல அலுவலர்களிடம் மாணவிகள் புகார் அளித்ததை அடுத்து சேலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உமா விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து இளையகண்ணை கைது செய்து போலீசார் சிறையில் அடைந்தனர்.