திருப்பத்தூர் நகரப்பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள், பள்ளிமாணவர்கள் கடும் அவதியடைந்துள்ளனர். நகரின் மையப்பகுதியில் சுமார் 10 க்கும் மேற்பட்ட மாடுகள் சாலையில் சுற்றித்திரிவதால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் சூழல் ஏற்படுகிறது. இதுமட்டுமின்றி சாலையில் செல்வோரும் அச்சப்படுகின்றனர்.