தேனி மாவட்டம் உத்தமபாளையம் - திண்டுக்கல் சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குழாய் பதிக்கும் பணிகளுக்காக தோண்டபட்ட சாலையை சரிவர மூடி முறையாக செப்பனிடாமல் விட்டுவிட்டதால், அந்த பகுதி முழுவதும் தூசி மணல் புகை மூட்டமாக காணப்படுவதோடு, அருகிலுள்ள வீடுகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களிலும் தூசி படிந்து வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் உடனடியாக சாலையை சீரமைத்து தரக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.