ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்சாரம் தாக்கியதில் காயமடைந்த அனந்தலையை சேர்ந்த மின்வாரிய ஊழியர் நாகரத்தினத்தை, சிகிச்சைக்கு கொண்டு வந்தபோது, ஆம்புலன்ஸ், மருத்துவர்கள் இல்லாததாகக் கூறி மறியலில் ஈடுபட்டனர்.