விழுப்புரம் அருகே உரத் தொழிற்சாலையை மூடக்கோரி 500-க்கும் மேற்பட்டோர் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாமந்தூரில் உள்ள தனியார் உரத் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய நச்சுக் கழிவுகளால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் கூறி, தொழிற்சாலையை முற்றுகையிட்ட பொதுமக்கள் சாலைமறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.