காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே அம்பேத்கர் சிலையை அகற்ற எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, விசிக தலைவர் திருமாவளவன் தலையிட்டு வாட்ஸ் ஆப் வீடியோ கால் மூலம் பொதுமக்களிடம் பேசி, பட்டா இடத்தில் சிலை அமைத்துத் தருவதாக உறுதியளித்ததை தொடர்ந்து, அம்பேத்கர் சிலையை அதிகாரிகள் அகற்றினர்.