புதுக்கோட்டையில் நடைபெறவிருக்கும் இபிஎஸ் கூட்டத்தில் கலந்து கொள்ள வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வெள்ளி தட்டில் வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பு விடுக்கப்பட்டது. மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரிலான தேர்தல் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, வரும் 24 மற்றும் 25ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்ற உள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக வணிகர்கள் மற்றும் பொதுமக்களை வரவழைக்க புதுக்கோட்டை நகர பாஜக சார்பில் வீடு வீடாகவும் கடை கடையாகவும் சென்று அழைப்பு விடுக்கப்பட்டது.