புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படும் கறம்பக்குடி சாலையை சீரமைத்து தரக் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைக்காவிட்டால், வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும், குடும்ப அட்டைகளை அரசிடம் ஒப்படைக்க போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருமணஞ்சேரி, பட்டத்திக்காடு, வட தெரு, கரு.தெற்குத்தெரு, கரு.கீழத்தெரு, இலைகடிவிடுதி ஆகிய ஆறு கிராமங்களில் இருந்து கறம்பக்குடி செல்லும் சாலை, நடக்க கூட முடியாத அளவிற்கு சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுவதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதையும் படியுங்கள் : 300 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த கார் விபரீத விபத்தில் முடிந்த சாகச முயற்சி..!