குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்றக் கோரி வட்டார வளர்ச்சி அலுவலக கதவை மூடி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியாத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால், கொண்ட சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் மழைநீருடன், கழிவுநீரும் கலந்து குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நின்றது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.