விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே எடப்பாளையம் கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்ட துணை சுகாதார நிலையத்தை இன்று முன்னாள் அமைச்சரும் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினருமான பொன்முடி திறந்து வைத்தார். அதன் பின்னர் அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், கிராமத்திற்கு என்னென்ன திட்டங்களை செய்துள்ளோம் என பட்டியலிட்டு கூறினார். நிகழ்ச்சி முடிந்து கீழே இறங்கி வந்த அவரை சூழ்ந்து அப்பகுதி பெண்கள் வீட்டுமனை பட்டா, குறிப்பிட்ட பகுதியில் சாலை வசதி இல்லை என தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பினர். இதற்கு அனைத்தையும் செய்து தருவேன் என கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் அடுக்கடுக்கான குறைகளை அங்கிருந்தவர்களிடம் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. துணை சுகாதார நிலையம் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ளதால் நோய் தொற்று பரவும் அபாயமும் இருப்பதாக தெரிவிக்கினர். பள்ளியில் போதிய இடவசதி இல்லாமல் மாணவர்கள் வளாகத்தின் வெளியே அமர வைத்திருக்கும் நிகழ்வும் அந்த பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதும் பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்டித் தருவதற்கான எந்தவித வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Related Link குழந்தைகளுக்கு ஆதார் கார்டு பெற முடியாமல் அலைக்கழிப்பு