திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தனியார் சவுடு மண் குவாரிக்கு வந்து செல்லும் லாரிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பனப்பாக்கம் ஊராட்சியில் இயங்கிவரும் இந்த குவாரியிலிருந்து சவுடு மண்ணை ஏற்றிச் செல்லும் ஏராளமான லாரிகளால், வடமதுரை கூட்டு சாலை மற்றும் பெரியபாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளதாகவும், தார்ப்பாய் போட்டு மூடாமல் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் புகார் தெரிவித்த மக்கள் லாரிகளை இயக்க நேரக் கட்டுப்பாடுகள் விதிக்க கோரிக்கை விடுத்தனர்.