அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த தாதம்பேட்டையில் சுத்தமான குடிநீர் கேட்டு கேள்வி எழுப்பிய பொதுமக்கள் அசுத்தமான தண்ணீர் பாட்டிலை நீட்டியதால் ஆத்திரமடைந்த திமுக எம்.எல்.ஏ. கண்ணன் அதனை பிடுங்கி வீசி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திமுக எம்.எல்.ஏ.விடம் ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.