ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்காவில் போதுமான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கழிவறை கட்டுமான பணி மந்தமாக நடைபெறுவதாகவும், குடிநீர் வசதிகள் கூட அமைத்து தருவதில்லை எனவும் அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.