சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த வீரப்பம்பாளையம் பகுதியில் 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சமீபத்தில் கெயில் நிறுவனத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட கேஸ் லைன் பதிக்கும் பணியின் போது, வழியாக சென்று குடிநீர் பைப்புகள் சேதப்படுத்தப்பட்டதாக தெரிகிறது.இது குறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் குடிநீரின்றி தவித்து வந்த மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.இதையடுத்து குடிநீர் பைப்புகள் சீர் செய்யப்படும் என நகரமன்ற தலைவர் உறுதியளித்ததோடு, தற்காலிக ஏற்பாடாக பொதுமக்களுக்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டது.