தமிழக மீனவர்களின் நலனை பாதுகாக்க வலியுறுத்தி மதுரையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியபோது இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்து வரும் இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை ஒடுக்க வலியுறுத்தி, மதுரையில் தமிழ் மீனவர் கூட்டமைப்பினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். மதுரை கட்டபொம்மன் சிலையில் இருந்து ஊர்வலமாகச் சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்பினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், பின்னர் போலீசார் அவர்களை கைது செய்தனர்.