வேலூர் மாநகராட்சி அலுவலக நுழைவாயில் முன்பு கூலி உயர்வினை வழங்காததை கண்டித்து தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு 2022ஆம் ஆண்டு நிர்ணயித்த 430 ரூபாய் கூலி மட்டுமே வழங்கப்படுவதாகவும், இரண்டு ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்ட கூலி உயர்வு வழங்கப்படவில்லை என கூறி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குனர்கள் மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பியும் இதுவரை நிர்ணயித்த கூலி வழங்கப்படவில்லை என தூய்மை பணியாளர்கள் குற்றம்சாட்டினார்.