செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்யக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கடையை திறக்க விடாமல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். வயல்வெளி பகுதியில் மதுபானக்கடை உள்ளதால் அவ்வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கும், விவசாய வேலைகளுக்குச் செல்லும் பெண்களுக்கும் இடையூறு ஏற்படுவதாகத் தெரிவித்தனர்.