ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட நிலம் கேட்டு 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள், எம்பி ஆ.ராசா பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனர். அரசு மருத்துவமனை அருகில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு 45 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், உழவர் சந்தைக்கு அருகிலுள்ள இடம் கேட்டு போராட்டம் நடத்தினர்.