இலவச மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் துணை மின் நிலைய வளாகத்தில், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆழ் துளை குழாய் மோட்டார்களை தலையில் சுமந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மின் இணைப்புகள் வழங்குவது தொடர்பாக, தமிழக அரசு அரசாணை வெளியிட்டு 4 மாதத்திற்கு மேலாகியும் இதுவரை மின் இணைப்பு வழங்கப்படாததை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலவச மின்இணைப்பு கேட்டு சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் 20 ஆண்டுகளுக்கு மேலாக பதிவு செய்துவிட்டு காத்திருப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.