மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நடத்தப்படும் முழு அடைப்பு போராட்டத்தால் புதுச்சேரியே முடங்கி போயுள்ளது. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு, ஆட்டோ, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படாததால் சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, திருக்கனூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.