சுங்கச்சவாடி கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சவாடியை முற்றுகையிட்ட மனிதநேய மக்கள் கட்சியினர், கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் சுங்கச்சாவடி வழியாக சென்ற வாகனங்களை மறித்து போராட்டம் நடத்தியதால், போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உருவானது.இதையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்.