தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேம்பாரில் உள்ள சுனாமி குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மீனவ மக்கள், பட்டா கேட்டு விளாத்திக்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த செப்டம்பர் மாதமே தங்களுக்கு பட்டா வழங்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் வட்டாட்சியர் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டினர். தங்களுக்கு தற்காலிக முகாம்கள் வழங்காமல், குடியிருக்கும் பகுதிக்கு உடனடியாக பட்டா வழங்கவும் கோரிக்கை வைத்தனர்.