வீட்டுமனை பட்டா : திருவள்ளூர் அருகே வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி, பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிருதலாபுரம் கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர், தாங்கள் பல ஆண்டுகளாக சாகுபடி செய்து வந்த 27 ஏக்கர் அரசு நிலத்தை வேறு ஒருவருக்கு வழங்குவதை கண்டித்து கடந்த 26ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தாங்கள் பயிர் செய்து வரும் நிலத்திற்கு பட்டா வழங்கக் கோரி, பேரணியாக வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், பின்னர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.