இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் முன்பு இரவு நேரத்தில் பக்தர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா நடந்து வருகிறது. விழாவின் அத்தனை நாட்களுக்கும் அம்மனுக்கு அபிஷேகம் செய்ய யானை மீது புனித நீர் எடுத்து வருவது பாரம்பரிய வழக்கம். இந்தாண்டு தற்போது வரை புனித நீர் கொண்டு வர யானை அழைத்து வரப்படாததை கண்டித்து கோவில் முன்பு பக்தர்கள் மற்றும் நாகர்கோவில் எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி ஆகியோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் சங்கரன்கோவிலில் இருந்து யானையை அழைத்து வருவதாக உறுதியளித்தனர்.